பணம் கேட்டு முதியவரைத் தாக்கிய திமுக பிரமுகர்கள் - போலீசார் விசாரணை.!
dmk excuetives threat to old man in chennai for money
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மண்ணு ரமணய்யா என்பவர் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறார். சுமார் 14 வீடுகள் கொண்ட குடியிருப்பை, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து கட்டி வருகிறார்.
இந்த நிலையில் ரமணய்யாவை, 188வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்களான திமுக பிரமுகர்கள் விமல் என்ற பெயர் கொண்ட இருவர் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக இரண்டு முறை மிரட்டிச் சென்ற அந்த நபர்கள் நேற்று மீண்டும் சென்று பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டி முதியவரை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் மீது முதியவர் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
dmk excuetives threat to old man in chennai for money