ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு மளமளவென குவியும் கூட்டம் - உற்சாகத்தில் திமுக தொண்டர்கள் - வெளியான அறிவிப்பு..!
dmk-leader-mk-stalin-begins-election-campaign
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் இன்று காலை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள ஸ்டாலின், முன்னதாக நேற்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அதனை தொடந்து கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளிடமும், சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாளிடமும் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் இன்று காலை தொடங்கினார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை, திருவாரூரில் மார்ச் 20ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று கலை 7.30 மணியளிவில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தமது பூர்விக இல்லத்திலிருந்து அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தமது வீட்டு வாசலில் கூடியிருந்த கட்சித் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்ற ஸ்டாலின், அங்கு சிறுமி ஒருவரின் மொபைல் போனில் செல்பி எடுத்துக் கொண்ட பிறகு, தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணை ஆதரித்து, அப்பகுதியில் அவர் வாக்குகளை சேகரித்தார்.
English Summary
dmk-leader-mk-stalin-begins-election-campaign