அதிமுகவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!
ex minister jayakumar press meet in admk office
சென்னை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
"எல்லா தரப்பட்ட மக்களும் உண்மையாக போற்றக்கூடிய தலைவராக எம்.ஜி.ஆர். உள்ளார். இது போல கருணாநிதிக்கு செய்கிறார்களா? கிடையாது. என்ன திரை போட்டு மு.க.ஸ்டாலின் மூடினாலும் அ.தி.மு.க.வை அழிக்கவோ மறைக்கவோ முடியாது.
ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அ.தி.மு.க.வின் முடிவு. போலியான வெற்றியை பெற தி.மு.க. எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். குருமூர்த்தி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி சேர வேண்டும் என்றும் எடப்பாடிக்கு அரசியல் நோக்கு இல்லை.
குருமூர்த்தி ஏற்கனவே என்கிட்ட பல தடவை வாங்கிக் கட்டிக் கொண்டார். அவர் வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு. சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம். இது கட்சி எடுத்த முடிவுதான்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தபோது 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தற்போது பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டாம், 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து இருக்கலாம்.
2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்க முடியவில்லை என்றால் 1000 ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அதுவும் கொடுக்காமல் மக்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கோபத்தில் உள்ளனர்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ex minister jayakumar press meet in admk office