சாலையோரம் நின்ற லாரியில் மோதிய பேருந்து - பயணிகளின் கதி என்ன?
six peoples died and 13 peoples injured for accident in andira
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றார்.
அதன் படி இந்த பேருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சீலப்பள்ளி அடுத்த காஜுல பள்ளி என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தாய் மகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு சாலையில் கவிழ்ந்த பேருந்தை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக திருப்பதி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே பலியானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களில் 6 பேரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
six peoples died and 13 peoples injured for accident in andira