பிரபல நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் வசித்து வந்தவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டு இருந்த போது அதிகாலை 2 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர், வீட்டு வேலைக்கார பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சயீப் அந்த நபரை பிடிக்க முயன்றார். அந்த நேரத்தில் மர்ம நபர், நடிகர் சயீப் அலிகானை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதனால், படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த சயீப் அலிகானை அவரது குடும்பத்தினர் மீட்டு பாந்திரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதற்கிடையே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கொள்ளை அடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for saif ali khan attack case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->