முன்கூட்டியே ஆட்சியை கலைக்க நேரிடும் - டெல்லிக்கு கடிதம் எழுதிய திமுக! - Seithipunal
Seithipunal


முன்கூட்டியே ஆட்சியை கலைக்க நேரிடும், அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்று, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் அனுப்பட்டுள்ள அந்த கடிதத்தில், "ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம்.

மத்திய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால் ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது.

உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று திமுக தரப்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK letter to One Country One Election High Level Committee


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->