இந்துக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி திமுக தான் - அமைச்சரின் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்துக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி திமுக தான் என்று, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயிலில் ஆய்வு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "இதுவரை தமிழகத்தில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 

கடந்த 2 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் 1,922 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 

அனுபாவி சுப்பிரமணியர் கோயிலில் ரோப் கார் வசதி அமைக்க சாத்திய கூறு உள்ளதா என்று, ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை பெற்றவுடன் ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும். 

கோயிலுக்கு சொந்தமான 5,335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 5,135 கோடி ரூபாய் ஆகும்.

பக்தர்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனே நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

ஆட்சியாளர்களை தேடி ஆதீனங்கள் சென்ற காலம் போய், இப்போது ஆட்சியாளர்கள் ஆதீனங்களை தேடி வருகின்றோம். 

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக அல்ல. இந்துக்களை பாதுகாத்து, அரவணைக்கும் கட்சியாக திமுக உள்ளது" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Sekar Babu Say About Hindu People


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->