மணல் திருட்டில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ?! வெளியான வைரல் ஆடியோ! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து புகார் அளிக்கக் கூடாது என, திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வைரலாகும் அந்த ஆடியோவில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் "மேலே இருந்து பேசி வருகிறார்கள்,. நான் மண்டபம் கட்டுவதற்காக மணல் தேவைப்படுவதால் எடுத்து வருகிறேன்" என பேசியுள்ளார்.

அதற்கு எதிர் முனையில் புகார் அளித்த பால்வண்ணன் என்பவர், "மூன்று அடி தோண்டுவதற்கு பதில் 30 அடி தோண்டுகின்றனர். சாலையின் மீது அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை பாழாகும்" என பதில் அளித்துள்ளார்.

மேலும் பேசிய அந்த நபர், அதிகாரிகளின் வீட்டில் மண் எடுத்தால் விட்டுவிடுவார்களா? கலெக்டர் வீட்டில் மண் எடுத்தால் விட்டுவிடுவாரா? என, சட்டமன்ற உறுப்பினரை பார்த்து கேள்வி எழுப்பிய இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை இதுவரை தெரியவில்லை. இந்த ஆடியோவுக்கு திமுக எம்எல்ஏ தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும், அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை அதிகாரியிடம் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்காமல், நேரடியாக புகார் செய்த நபரை பற்றி அரசியல்வாதிகளிடம் தெரிவிப்பதால் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA involved in sand theft


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->