நீட் கையெழுத்து விவகாரம்! பதவி விலக தயார் - திமுக எம்எல்ஏ அதிரடி! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வுக்கு எதிராக அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து, மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய விவகாரத்தில் பதவி விளக்கவும் தயாராக உள்ளதாக விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, கடந்த அக்.21-ம்தேதி திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் கையெழுத்து இயக்கம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

அதன்படி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் இந்த இயக்கம் கட்சி நிர்வாகிகளிடமும், பொது மக்களிடமும் கையெழுத்துகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்து, திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா விளக்கம் அளித்து கையெழுத்து பெறும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஒரு கட்சியின் தனிப்பட்ட செயலை அரசு பள்ளியின் வகுப்பறை வரை கொண்டுவர இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இதுகுறித்து எம்எல்ஏ பிரபாகர் ராஜா பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றப்போது, ஒரு மாணவர் என்னிடம் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறுவது தொடர்பாக கேள்வி எழுப்பவே, நான் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் நீட் தேர்வின் பாதிப்புகளை பகிர்ந்துகொண்டு, விருப்பமுள்ளவர்கள் கையெத்திடலாம் என்று தெரிவித்தேன். 

கையெத்திட வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சிலை தவறான நோக்கத்தில் இதனை சித்தரிக்க முயல்கின்றனர். வகுப்பறைக்கு சென்று நான் கையெழுத்து பெற்றிருக்கக்கூடாது. அது தவறு என்றால் ஏற்கிறேன். மேலும், மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றாக கூறும் குற்றச்சாட்டை உறுதிபடுத்தினால் நான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன்” என்று எம்எல்ஏ பிரபாகர் ராஜா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Neet Against Sign issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->