மதுரை எய்ம்ஸ் விவகாரம் | திமுக எம்பி கதிர் ஆனந்த் கேள்விக்கு மத்திய அரசு பதில்! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியில் காலதாமதம் ஏன்? கட்டுமானப் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று நாடாளுமன்ற மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற திமுக எம்பி கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், நடவடிக்கை எடுத்து இருந்தால் அதன் விவரங்கள் மற்றும் அதிகப்படியான கால தாமதத்திற்கான காரணங்கள் யாவை?

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்கிய நிதியின் விவரங்கள் மற்றும் JICA விலிருந்து நிதி பெறுவதில் கால தாமதத்திற்கான காரணங்கள் யாவை?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் மற்றும் மதுரை எய்ம்ஸ் கட்டப்படும் நேரம்; மற்றும் நாட்டில் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளதா? அப்படியானால், நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட / செலவிடப்பட்ட நிதி விவரங்கள், இடம்-வாரியாக தெரிவிக்கவும்?என்றும் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு மத்திய  அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தில் ராஜாங்க அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ் நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கு, எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) நியமிக்கப்பட்டுள்ளார். 

மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிவில் பணிக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி ஏலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26, 2021 அன்று ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை ஜப்பானிய யென் 22,788,000,000 மட்டுமே.

மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி அக்டோபர், 2026 ஆகும். இந்திய அரசு திட்டத்தின் முன் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக ரூ.12.35 கோடி மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மேலாண்மை ஆலோசனைக்கு ரூ.6கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்
இணைக்கப்பட்டுள்ளன  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP KATHIR ANAND Madurai AIiMS issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->