மீண்டும் சர்ச்சை.. "5 பேருக்கு பொதுவான மனைவி"யை வைத்து சூதாடினார்களே.. திமுக எம்பி ட்விட்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரங்கேறும் தொடர் தற்கொலையை சம்பவம் காரணமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் நிறைவேற்றியதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் அந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தடை மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து இருந்தது.

தமிழக அரசு விளக்கமளித்து இரண்டு மாதங்கள் ஆகியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவில் சில திருத்தங்களை செய்து மீண்டும் அனுப்பும்படி நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சூதாரத்தை திறமையின் விளையாட்டு என கூறி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார். எனக்கு ஒரு டவுட்டு அந்த 5 பேர் தங்களை பொதுவான மனைவியை வைத்து சூதாடினர்களே அது எந்த வகையான திறமையின் கீழ் வரும் ரவி" என பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட இணையதள வாசிகள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை வறுத்தெடுத்த வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயத்தின் குலதெய்வத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடர்ந்து இந்து மத கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP SenthilKumar controversial tweet on online rummy ban bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->