ரொம்ப மன வேதனையா இருக்குங்க - திமுக எம்.பி., திருச்சி சிவா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திருச்சி : திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் இடையேயான மோதல் முற்றி அடிதடி, ரவுடிசம் வரை சென்றுள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு, திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியாதல், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மீதும், அவரின் ஆதரவாளர் வீடு மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையே, கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையறிந்த நேருவின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து திருச்சி சிவாவின் ஆதரவாளர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவின் 4 நிர்வாகிகளை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுக்க, இந்த நான்கு பெரும் காவல்நிலையத்தில் சரண்டராகினர்.

இந்நிலையில், தன் வீடு மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவரின் பேட்டியில், "என் வீட்டில் நடந்த தாக்குதல் மிகுந்த மத வேதனை அளிக்கிறது. தனிநபரை விட கட்சிதான் முக்கியம் என்று நினைப்பவன் நான். மிகுந்த மனசோர்வில் இருக்கிறேன், என்னால் எதுவும் பேசக்கூடிய மனநிலை தற்போது இல்லை" என்று திருச்சி சிவா தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Trichy Siva say about attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->