சுடுகாட்டை ஆக்கிரமித்த திமுகவினர்... கட்சி அலுவலகம் திறந்ததால் பரபரப்பு...!!
DMK office opened on cemetery land in tirupur
திருப்பூர் மாவட்டத்தை அடுத்த பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் 4 ஏக்கர் மேல் சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் இருந்து வருகிறது. எந்தவித முன் அனுமதியும் பெறாமல் திமுக கட்சியின் கிளை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சுடுகாட்டுக்கு சொந்தமான நிலத்தை சமன் செய்து சிமெண்ட் ஷீட் வேய்ந்த ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்திற்கு வாழைமரம் மற்றும் தோரணம் கட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை வைத்து பூஜை செய்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பொங்கலூர் ஒன்றிய சேர்மன் குமார் "இந்த இடத்தில் திமுக கிளைச் செயலாளர் கிட்டுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டு கட்டிடம் அமைத்திருந்தார். தற்பொழுது அவர் சிமெண்ட் ஷீட்டாக மாற்றி டீக்கடை அமைப்பதாக கூறினார் அவர் அழைத்ததின் பேரில் பூஜையில் பங்கேற்றேன்" என விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவம் விளக்கம் அளித்த தாசில்தார் நந்தகோபால் "வருவாய்த்துறை ஆவணத்தின் படி ஷெட் அமைக்கப்பட்டுள்ள பகுதி சுடுகாடு என தெரிய வருகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடம் என்ற அடிப்படையில் திமுகவினரே அகற்றிக்கொள்ள வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் அனுப்பியும் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அகற்றாவிட்டால் வருவாய் துறையினரை அகற்றுவார்கள்" என எச்சரித்துள்ளார். திமுகவினர் சுடுகாட்டை ஆக்கிரமித்து அலுவலகம் கட்டிய விவகாரம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
DMK office opened on cemetery land in tirupur