போராட்டத்தில் யாரும் சாப்பிடக்கூடாது - அமைச்சர் உதயநிதி.! - Seithipunal
Seithipunal


போராட்டத்தில் யாரும் சாப்பிடக்கூடாது - அமைச்சர் உதயநிதி.!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் தி.மு.க.,வின் மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்டவை இணைந்து, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகம் முழுதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றன.

இது தொடர்பாக, அமைச்சர் உதயநிதி மூன்று அணியினரையும் இணைத்து, 'ஜூம்' செயலி மூலமாக ஆலோசனை நடத்தி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியின் பிற அணியினரையும் சேர்த்து கொள்ளலாம். போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மாலை 5:00 மணி வரை போராட்டத்தில் இருக்க வேண்டும். போராட்டத்தின்போது, யாரும் எதையும் சாப்பிடக் கூடாது. எல்லாரிடமும் செல்போன் என்ற ஆயுதம் உள்ளது. 

அனைவரும் இதை மனதில் கொள்ள வேண்டும். போராட்டத்தின் இடையே யாரும் எழுந்து சென்று, சாப்பிட்டு விட்டு திரும்பினால், அது உடனே சமூக வலைதளங்களில் எதிரொலிக்கும் என்று கட்சியினரை உதயநிதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk parties hunger protest in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->