மும்மொழி கொள்கை - திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.!
dmk protest against central government
தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ் நாட்டின் மீது மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாவது:- "மும்மொழி கொள்கையை பின்பற்ற தமிழ் நாடு அரசை மத்திய அரசு மிரட்டடுகிறது. வீழ்த்த முயன்றால் தமிழ்நாடு ஒன்றிணையும், எதிரி எந்த வடிவத்தில் வந்தாலும் வீழ்த்தும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என்று உரக்க குரல் எழுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dmk protest against central government