செந்தில் பாலாஜி வழக்கு: முதல் சாட்சிக்கே ஆட்சேபனை, குறுக்கு விசாரணை! தொடங்கியது அதிரடி விசாரணை!
DMK SenthilBalaji Case Chennai court
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்து வருகிறார்.
இது குறித்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாற்று பதிவு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது நீதிபதி, "தவறு என்று தெரிந்தே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளீர்கள், இதனை ஒப்புக் கொள்கீறிர்களா?" என்று செந்தில் பாலாஜி இடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "நான் குற்றவாளி அல்ல, என் மீது புனையப்பட்ட வழக்கு. நான் நிரபராதி, குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு" என்று நீதிபதி அல்லியின் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று துவங்கி உள்ளது.
இந்த வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய தலைமை மேலாளளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதற்க்கு செந்தில் பாலாஜி தரப்பில் சில ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 22க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK SenthilBalaji Case Chennai court