செந்தில்பாலாஜி வழக்கு: ஆளுநர் தான் காரணம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து துறையில் பணிகளை ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக, அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை வழக்குகள் அனைத்தையும் ஒரு வருடத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று, திருவண்ணாமலையை சேர்ந்த ஒய் பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

மேலும் அவரின் அந்த மனுவில், தமிழக அரசு வேண்டும் என்றே இந்த வழக்கை தாமதப்படுத்துவதாகவும், ஆளும் திமுகவின் கட்சிக்காரர் என்பதால் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றங்களில் தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த ஜனவரி மாதமே செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த அனுமதி கோரி, தமிழக ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பி இருந்தோம்.

ஆனால் அந்த கோப்புகள் மீது இன்னும் தமிழ்நாடு ஆளுநர் எந்த முடிவையும் சொல்லாமல் இருக்கிறார். தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான், நாங்கள் விசாரணையை நடத்த முடியும். 

மனுதாரர் குறிப்பிட்டுள்ள காலதாமதத்திற்கு உண்டான காரணம், ஆளுநரின் ஒப்புதல் அளிக்க அளிக்காததால் தான். இதில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நீதிபதிகள், தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளின் விவரங்களை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

மேலும் தமிழக அரசின் இந்த பதில் மனுவுக்கு, மனுதாரர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Senthilbalaji SC Case TNGovt reply TN Governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->