திண்டுக்கல்லில் பரபரப்பு - நடுரோட்டில் திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் பரபரப்பு - நடுரோட்டில் திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குமரன் திருநகரை சேர்ந்தவர் சரவணன். "பட்டறை சரவணன்" என்று நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்த இவர் தற்போது திண்டுக்கல் திமுக மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். 

இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சரவணன் இன்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் அருகே தைலத்தோப்பில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். 

அப்பொழுது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். 

இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீஸார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk supporter kill in dindukal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->