உங்களை வழிநடத்த உதயநிதி! அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள் - திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துமழை! - Seithipunal
Seithipunal



திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு குறித்து, திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி. 

அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான்.

தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது.

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமே இளைஞரணிதான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால்தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.

தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அவர் பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞரணியை கட்டி எழுப்பி வருகிறார்.

வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை, தொடர்ச்சியான உழைப்பு இவையனைத்தும் அவரிடம் இயல்பாகவே இருப்பவை.

கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும்" என்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Youth Wing Conference 2024 mk stalin wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->