கோவில் அருகே பட்டாசுகள் வெடிக்கக்கூடாது - மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழத்தின் பிற மாவட்டங்கள், இந்தியாவின் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர் என லட்சக் கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை யொட்டி  பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் தேவைக்கேற்ப தனியார் ஒப்பந்த பேருந்துகள் அரசு கட்டணத்திலேயே, அரசு வழங்குகின்ற பயணச்சீட்டு கொடுக்கப்பட்டு, அரசு ஒப்பந்த வாகனம் என்ற பெயரோடு இயக்கப்படுவதாக போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் கோவில் அருகே வசிப்போர் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு வெடித்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not burst firecrackers near the temple meenakshi amman temple administration warns


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->