போலியான செயலிகளில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம்..புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் எச்சரிக்கை!
Dont be fooled by fake apps Puducherry Cyber Crime Branch Police Alert
இணைய வழி குற்றவாளிகள் உருவாக்கிய போலியான செயலிகளில் (Fake App) மற்றும் இணையதளங்களில் தங்களின் பணத்தை கட்டி (Bedding) மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் எச்சரிக்கை பதிவு:நடைபெற்றுவரும் IPL கிரிக்கெட் தொடரின் போட்டிகளின் வெற்றி வாய்ப்புகளையும் வீரர்களின் தரங்களை பொருத்து Bedding எனப்படும் dream 11 , my 11 circle, MPL, Myteam 11, Hala pay, FanFight, Skill Fantasy, Hawzat, Paytm first games போன்ற செயலிகளைபோன்று இணைய வழி குற்றவாளிகள் உருவாக்கிய போலியான செயலிகளில் (Fake App) மற்றும் இணையதளங்களில் தங்களின் பணத்தை கட்டி (Bedding) மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்.
மேலும் ஹோட்டல்கள், பார், ரெஸ்ட்டோபார் மற்றும் தனியார் இடங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி Bedding ஏதேனும் நடக்கிறதா என்று சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அப்படி யாராவது ஐபிஎல் Bedding-இல் சிக்கினால் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஹோட்டல் உரிமம், பார் உரிமம், ரெஸ்ட்டோபார் உரிமம் மற்றும் எந்தவகை உரிமமாக இருந்தாலும் அதனை தடை செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
நடைபெற்றுவரும் ஐபிஎல் சம்பந்தமாக இணையவழியில் குற்றம் ஏதேனும் நடக்கிறதா என்பதை Special Team வைத்து கண்காணித்து வருகின்றோம். பொதுமக்கள் யாரேனும் ஐபிஎல் Bedding மூலம் பணத்தை இழந்திருந்தாலும், ஐபிஎல் Bedding சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்திருந்தாலும் (அவர்களுடைய விபரம் ரகசியமாக காக்கப்படும்) மற்றும் பாதிக்கபட்டிருந்தாலும் உடனடியாக இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413 2276144, 9489205246 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம். மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
.
English Summary
Dont be fooled by fake apps Puducherry Cyber Crime Branch Police Alert