காஷ்மீர் பக்கம் போகாதீங்க: நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
Dont go to Kashmir US warns citizens
அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். மேலும், துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்புள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அன்நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது.காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடக்கின்றன.
ஆகவே, அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். மேலும், துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்புள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
English Summary
Dont go to Kashmir US warns citizens