வார்த்தையை விட்ட டிஜிபி சங்கர் ஜிவால்! கேள்விகளால் கிழித்தெடுத்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு | கடந்த 50 நாட்களில் பாமகவை சேர்ந்த மூன்று நிர்வாகிகள்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக, அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில், செங்கல்பட்டில் இன்று மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் 20 நபர்களுக்கு மேல் கொடூரமான முறையில், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 50 நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் இதே போன்று, திட்டமிட்டு கொடூரமான முறையில், கூலிப்படையை ஏவி விட்டு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றார்கள். பலமுறை காவல்துறையிடம் வலியுறுத்தியும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை. 

முதலமைச்சரின் கீழ் இயங்குகின்ற காவல்துறை, இந்த கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் இந்த கூலிப்படை கலாச்சாரம் ஏதோ திடீரென்று வந்தது கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக ஊடுருவி, இப்போது உச்சத்தில் இருக்கிறது.

நிச்சயமாக காவல்துறைக்கு கொலை செய்த குற்றவாளிகள் யார்? கொலை செய்ய ஏவிவிட்டார்கள் யார் என்பது தெரியும். தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எங்களுக்கெல்லாம் மிகுந்த வேதனையை கொடுக்கிறது. 

தமிழக காவல்துறை என்றால் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக இருக்கும் என்றெல்லாம் பெயர் இருக்கிறது. 

சமீப காலத்தில் இது போன்ற கொலை குற்றங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கொலை குற்றங்களுக்கும், கூலிப்படை கலாச்சாரத்திற்கும் முக்கிய காரணம் கஞ்சா, மது தான் காரணம்.

டிஜிபி சங்கர் ஜிவால் தமிழகத்தில் நடக்கும் கொலைகள் அனைத்தும் குடும்பத்தகராதால் நடைபெறுவதாக சொல்கிறார். இப்படி ஒரு காரணத்தை அவர் சொல்லி இருக்கக் கூடாது. நடைபெற்ற இந்த கொலைகளில் பல கொலைகள் திட்டமிட்ட கொலைகள்.

திட்டமிட்ட கொலைகள் என்பது கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்வது. எங்களுடைய கோரிக்கை கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும். அதை டிஜிபி சங்கர் ஜிவால் செய்வாரா?

இந்த கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். கூலிப்படைகளுக்கு பயம் வர வேண்டும். கூலிப்படைகளுக்கு பயத்தை ஏற்படுத்துவாரா டிஜிபி சங்கர் ஜிவால்? இதான் என்னுடைய கேள்வி" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to DGP Sankar


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->