சிறந்த வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?...இண்டிகோ மீது ஆவேசமடைந்த சுருதி ஹாசன்! - Seithipunal
Seithipunal


விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, மோசமான வானிலை  உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை பாதிக்கப்படும் சமயத்தில், விமான நிறுவனங்களின் தரப்பில் முன்கூட்டியே பயணிகளுக்கு தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

மாறாக சில நேரங்களில் விமான நிறுவனங்களின் தரப்பில் உரிய அறிவிப்புகள் வெளியிடாத பட்சத்தில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில், மும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமானதாக நடிகை சுருதி ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை சுருதி ஹாசன், தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சாதாரணமாக குறை கூறுபவர் அல்ல என்றும்,  ஆனால் இண்டிகோ நீங்கள் உண்மையில் இன்று குழப்பத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த நான்கு மணிநேரமாக எந்த தகவலும் இல்லாமல் நாங்கள் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறோம். தயவுசெய்து உங்கள் பயணிகளுக்கு ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த பதிவிற்கு இண்டிகோ விமான நிறுவனம் அளித்துள்ள பதிலில், தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நீண்ட நேரம் காத்திருப்பது எத்தனை சிரமமானது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மும்பையில் மோசமான வானிலை நிலவி வருவதால் விமானங்களின் வருகை தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can you find a better way shruti haasan obsessed with indigo


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->