என்னுடைய தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி., மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.!  - Seithipunal
Seithipunal


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றளவை குறைக்கும் முடிவு திரும்ப பெறப்படுவதாக காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "வேடந்தாங்கல் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீட்டரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இத்தகைய முன்மொழிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றளவை குறைக்க சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு நிரந்தரமாக திரும்பப் பெறப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு குறைப்புத் திட்டம் கைவிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீயிலிருந்து 3 கி.மீயாக குறைக்கும் முடிவு கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  சரணாலயத்தைக் காக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முயற்சிகள் தொடங்கிய போது அதை கைவிட வேண்டும் என்று வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதினேன். அந்த முயற்சிகளுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Happy For TnGovt Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->