தலைநகரில் குடிநீர் பஞ்சம்.. காலி குடங்களுடன் திண்டாடும் சென்னைவாசிகள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக சென்னையின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. 

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று தெரிகிறது. சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் உள்ள நீர்மட்டம் வெயிலின் தாக்கம் காரணமாக குறைந்து வருகிறது.

அதே வளையில் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி நீரின்றி வறண்டு போய்விட்டதால் கடந்த மாதமே சென்னைக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. ஒருபுறம் வெயிலின் தாக்கம் மறுபுறம் கூடுகை தேவை என சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளில் நீர் மளமளவென குறைந்து வருவதால் தற்போது சென்னையின் ஒரு சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு மாம்பலம, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜூன் மாதம் வரை கோடை வெயில் கொளுத்தும் என்பதால் சென்னைவாசிகள் குடிநீருக்காக திண்டப்போகிறார்கள் என்று தெரிகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drinking water shortages in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->