குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திடுக - சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்!! - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது :-

குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திடுகவறண்டு போயுள்ள ஏரிகுளங்களை தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திடுக!

தமிழகத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்துவருகிறது. கடலூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்டு சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட முதலமைச்சர், அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வறட்சி பாதித்த 22 மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும் தமிழக மக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் வீராணம் ஏரி உள்பட பல ஏரிகள், குளங்கள் காய்ந்துள்ளன. இந்த ஏரி, குளங்களை உடனடியாக தூர்வாரினால் ஏராளமான பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, மழைக்காலங்களில் மழை நீரைச் சேமிக்க வழிவகுக்கும். எனவே, ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் பணிகளை துவக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று கூறிவுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinking water special cash cpim balakrishnan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->