திடீரென நிறுத்தப்பட்ட குடிநீர் - அதிர்ச்சியில் சென்னை மக்கள்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் வீராணம் ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடைவழியாக வரும்.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinking water stoped from veeranam river


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->