தமிழக முதல்வர் 3 நாட்கள் தென்மாவட்டங்களுக்கு பயணம்.. ட்ரோன்கள் பறக்க தடை.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும்  மார்ச் 5, 6, 7-ஆம் தேதிகளில் மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். 

அந்த வகையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drones banned March 5, 6, 7 in South districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->