சிறைச்சாலைகளில் போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகள்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் போதைப்பொருட்களின் ஊடுருவல் தற்போது பள்ளி, கல்லூரி மட்டுமின்றி சிறைச்சாலைகளுக்குள்ளும் பரவி விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி சிறையில் கைதிகள் அறைகளிலிருந்து ஸ்மார்ட் போன்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், அதனுடன் 11 சிறைச்சாலை அதிகாரிகள், அதாவது துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரமும் பாரதூரமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையான சம்பவங்கள் தொடருமானால், சட்டம், ஒழுங்கு சீரழியும் நிலை உருவாகி, காவல் துறையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drugs and Cell Phones in Prisons Commentary by O Panneerselvam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->