நடுரோட்டில் தாயின் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த கொடுமை.. மது போதை கணவன் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் பகுதியில் தாயின் கண் முன்னே மகளின் கழுத்தை அறுத்து அவரது கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஓட்டுனராக வேலை செய்துவரும் கிராமம் கடந்த மூன்று மாதங்களாக கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். மனைவி விஜயலட்சுமி நிலக்கோட்டையில் கூலி வேலை செய்து வருகிறார்.

இதில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராமு குளித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் விஜயலட்சுமி தனது கணவரை புரிந்து வத்தலகுண்டுவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயலட்சுமியும், அவரது தாயரும் வத்தலகுண்டில் உள்ள கடைக்கு சென்று விட்டு அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த ராமு தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வைத்துள்ளார். அதற்கு குடிக்காமல் ஒழுக்கமாக வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே வாழ வருவதாகவும் இல்லை என்றால் வர முடியாது என விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமு தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து விஜயலட்சுமியின் உடலில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனிடையே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்ய முயன்ற ராமுவை வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drunken husband try to killed wife in dindugal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->