தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளமாக கொட்டும். 

பின்னர், குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும். இதனால் சாரல் சீசன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.

இதனையடுத்து, இந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் சில நாட்கள் சாரல் மழையும், சில நாட்கள் வறண்ட வானிலையும் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து சாரல் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மேலும் ஒரு சில நாட்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில்,தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக  தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்துவருகிறது.

மேலும், மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to continuous rains bathing in Kurdalam waterfalls is prohibited


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->