நெல்லை, தென்காசியில் நில அதிர்வு!...வீடுகளை விட்டு வெளியேறி பொதுமக்கள் பீதி! - Seithipunal
Seithipunal


நெல்லை  மாவட்டம், அம்பாசமுத்திரம்,  பாபநாசம், ஜமீன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதே போல் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், பாப்பான்குளம், கல்யாணிபுரம்,ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 2 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறும் நிலையில், இந்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பெரும் இயற்கை சீற்றம் ஏற்பட்டது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் வழிந்தோடியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in nellai tenkasi people left their homes and panicked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->