ஆருத்ரா வழக்கு.. "நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்".. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 5 துணை நிறுவனங்களின் இயக்குனர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் அமலாக்க துறையினரும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர். 

ஆருத்ரா போன்று பல நிறுவனங்களின் மோசடி வழக்குகளையும் அமலாக்க துறையினர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகர் ஆர்.கே சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாடு திரும்பும் போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Economic Offenses Branch has issued lookout notice to RK Suresh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->