செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகீர்!
ED Case Senthilbalaji case SC Order july
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில், அவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த கடுமையான ஆதாரங்கள் அழிக்கும் நடவடிக்கை தினமும் நடந்து வருவதாகவும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால், எங்களது கடமையை செய்யவில்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எங்களால் உங்கள் கடமையை செய்ய முடியவில்லை என்றும் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம் என்று, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மேலும், உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
செந்தில்பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறையின் இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
ED Case Senthilbalaji case SC Order july