6 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!...பின்னனியில் இருந்த கணவர் உட்பட 3 பேர் அதிரடியாக கைது!
6 months pregnant woman hanged herself 3 people including her husband who was behind the scenes were arrested
கர்நாடக தலைநகர் பெங்களூரு தொட்டபள்ளாப்புரா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும், இவரது மனைவியான ரூபா என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். சுரேஷ் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி ரூபா. தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரூபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொட்டபள்ளாப்புரா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ரூபாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில், ரூபா எழுதிய கடிதம் நேற்று முன்தினம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், தன்னிடம் தனது கணவர் மற்றும் மாமனார் நரசிம்ம மூர்த்தி, மாமியார் தேவம்மா வரதட்சணை கேட்டு தொல்லை அளித்து வந்ததாகவும், இதனால் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி உள்ளார்.
இதையடுத்து ரூபாவின் கணவர் சுரேஷ், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
6 months pregnant woman hanged herself 3 people including her husband who was behind the scenes were arrested