தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை திடீர் கடிதம்! காரணம் என்ன?
ED letter to TN dgp
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4730 கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் அரசு ஊழியர்களின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. 5 மாவட்டங்களில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மிகத் தெளிவான ட்ரோன் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்துள்ளோம். 4 ஒப்பந்த நிறுவனங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
ஒரு இடத்தில் இரண்டு இயந்திரங்களை வைத்து மட்டுமே மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் மணல் அள்ளப்படுகிறது.
சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்ததையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட 23.64 லட்சம் யூனிட் அதிகமாக கடந்த ஆண்டு மட்டும் மணல் அள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.