வாட்ஸ் ஆப் சேனல் - அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் அழைப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "அதிமுக வாட்ஸ் ஆப் சேனலில் கட்சி தொண்டர்கள் இணைய வலியுறுத்தினார். அதாவது, கட்சி தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் இணைய வேண்டும். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு கூட்டணி தான் காரணம் என்று பலர் சொன்னார்கள். எந்த கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவில் மட்டும் தான் உண்டு. நம்முடைய கட்சி பலம் உண்டான கட்சி" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy welcome admk fans joined whatsapp channel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->