''ஆள் இல்லாமல் கிடந்த இருக்கைகள்'' - திமுகவை வறுத்தெடுத்த எடப்பாடி! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசி இருப்பதாவது, 

''திமுகவால் இளைஞர் அணி மாநாட்டை நினைத்தபடி நடத்த முடியாமல் இருக்கைகள் நிரம்புவதற்கு ஆள் இல்லாமல் காலியாக இருந்தது. 

ஆனால் அ.தி.மு.க ஏற்பாடு செய்த மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்த திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது. 

நீட் தேர்வுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும் மாநாட்டுக்கு வெளியே சிதறி கிடந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும். 

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பயணிகளின் தேவைகளுக்காக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டத்தை தற்போது உள்ள தமிழ்நாடு அரசு அவசரமாக திறந்து வைத்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்'' என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->