குழந்தைகளுடன் மழை நீரில் தவறி விழுந்த பெண்! எழும்பூர் சாலையில் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை நேற்று இரவில் இருந்து சென்னையில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அனைத்து வாகனங்களும் சாலையில் ஊர்ந்தவாரே சென்று கொண்டு இருக்கின்றன.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் எழும்பூர் தமிழ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் அந்த சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாநகராட்சி ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபடாததால் குளம் போல் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் அதற்கான வழிகள் சரியாக அமைக்கப்படாததால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. மேலும் வடிகால்வாயில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் அகற்றப்படுவதால் தண்ணீர் செல்ல முடியாமல் குளம் போல் சாலை முழுவதும் தேங்கியுள்ளது.

இன்று காலை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்ற பெண் ஒருவர் குழந்தைகளுடன் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் மீட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி தரப்பில் மழை நீரை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்து காவல்துறையினர் வடிகால் வாய் மூடிகளை அகற்றி போக்குவரத்து தடுப்புகளை அமைத்து உதவி செய்து வருகின்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egmore Tamilroad woman fell in the rain with children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->