பொங்கல் பண்டிகை எதிரொலி - சென்னையிலிருந்து 8 லட்சம் பேர் பயணம்.!
eight lakhs peoples travel from chennai for pongal festival
நாளை பொங்கல் பண்டிகை கொண்டப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி படிக்கும், வேலைபார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் உள்ளிட்டவை இயக்கப்பட்டன.
அந்த வகையில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கியநகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் மட்டும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதேபோல், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இப்படி கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என்று மொத்தமாக 5 லட்சம் பேர் பேருந்துகளில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன் படி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரெயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மேலும், விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றுள்ளனர். அந்த வகையில், கடந்த 2 நாட்களில் பேருந்து, ரெயில், விமானங்கள் மூலம் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
English Summary
eight lakhs peoples travel from chennai for pongal festival