#BREAKING | நாடாளுமன்ற தேர்தல் 2024! தமிழக டி.ஜி.பி. விடுத்த பரபரப்பு சுற்றறிக்கை! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேதி இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.

சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த சுட்டறிக்கையில், "உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவு.

தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது

நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது

ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது" என்று டி.ஜி.பி-யின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ELECTION 2024 TN DGP STATEMENT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->