தமிழ்நாட்டில் 1,297 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடும் முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாடு தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் சத்ய பிரதா சாகு கூறியதாவது, தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,297 கோடி மதிப்பிலான பொருட்கள் மட்டும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாளை தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்திக் கொள்ளலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாத தேர்தல் பணியாளர்கள் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission illegal cash statement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->