#BREAKING | அதிமுக தொடர்ந்த வழக்கு! சற்றுமுன் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலறிக்கை! - Seithipunal
Seithipunal



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இல்லாத 30 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒரே நபரின் பெயர் இரு இடங்களில், இறந்த வாக்காளரின் பெயர்கள் நீக்கப்படவில்லை என அதிமுக குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், இதுகுறித்து அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், "ஈரோடு கிழக்கு தேர்தலை எப்படி நேர்மையாக நடத்தப் போகிறார்கள். எந்த வகையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என்பது குறித்தான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் பண பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் 238 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா, வெப் காஸ்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தல் சம்பந்தமான புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission Reply to ADMK Chennai HC Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->