அடுத்த ஷாக் நியூஸ்.. ரூ.1,000 மேல் மின்கட்டணம் வருதா..? அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது வரை அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தவில்லை. 

இந்த நிலையில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் மற்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதில் மின்கட்டணம் ரூ.5,000க்கு மேல் இருந்தால் மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது.

இந்த நிலையில் ரூ.1,000 மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதை கட்டாயமாக்க தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் மின்சார வாரியத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி மின்கட்டணம் ரூ.1,000க்கு மேல் இருந்தால் அதை ஆன்லைனில் பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை ஆகியவற்றின் மூலம் மட்டுமே இனி செலுத்த முடியும்.

அதன்படி 372 யூனிட் களுக்கு தாண்டிய வீட்டு உபயோக பயனாளர்கள் மின்வாரிய அலுவலக கவுண்டர்களின் இனி பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் பணம் செலுத்துவதும், கவுண்டர்களின் தேவையற்ற பணத்தை கையாள்வதும் தவிர்க்கப்படும். தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியம் டிஜிட்டல் முறையில் 74% வருவாயை வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity bill above Rs1000 Online payment mandatory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->