வேளாண் விளை நிலங்களுக்குள் சுற்றித் திரியும் யாணைகள்! வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க விவசாயிகள் கோரிக்கை.!
Elephants in agri fields
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜகடை பகுதி ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப்பகுதியாகும். இங்கு வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுகின்றன. இப்பகுதிகளில் கோடைகாலங்களில், காட்டு யாணைகள் உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம்.
மகாராஜகடை பகுதிகளுக்குள் தற்போது கர்நாடக மற்றும் ஆந்திர வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய யானைக்கூட்டம் அதிகாலை நேரத்தில் வந்து விளைநிலங்களை நாசம் செய்து வருவதாகவும், பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதில் இப்பகுதியில், 9 யானைகள் சுற்றி வருவதாகவும், அவற்றை ஊருக்குள் நுழையவிடாமல் வனப்பகுதிக்கு விரட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.