ராணுவத்தில் சேர வாய்ப்பு; தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்..!
Eligible youth can apply online to join the Army
இந்திய ராணுவத்தில் (அக்னி வீரர்கள்) பல்வேறு பிரிவுகளில் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. இதன் படி விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர்/ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 08-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் ஆன்லைனில் பதிவு செய்ய www.joinindianarmy.nic.in. ராணுவ இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Eligible youth can apply online to join the Army