அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு..எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு!
Encroachment of government premises Delegation of officials in presence of Leader of the Opposition
அரும்பார்த்தபுரம் பகுதியில் அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக புகார்வந்தநிலையில் எதிர்க்கட்சித்தலைவர்இரா.சிவாமுன்னிலையில்மாவட்டஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி ,அரும்பார்த்தபுரம் நூறடிச்சாலையில் அரும்பார்த்தபுரம் மேம்பாலம் முதல் உழந்தை ஏரி வரை சாலைக்கும், இரயில்வே பாதைக்கும் இடையே உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், சிலர் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தெற்கு பகுதி துணை ஆட்சியர் குமரன், நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் செந்தில்குமரன், தேசிய நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சேகர், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் மீறுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் குழுவினர் எச்சரித்தனர். தொடர்ந்து அரும்பார்த்தபுரம் இரயில்வே பாதையை கடப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
English Summary
Encroachment of government premises Delegation of officials in presence of Leader of the Opposition