காலாண்டு விடுமுறை நிறைவு: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு!
End of Term Holidays Schools Open
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 19 முதல் 27 வரை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. அந்த விடுமுறை இன்று முடிவடைந்ததால், மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
காலாண்டு விடுமுறைக்குப் பிறகு, மாணவர்கள் உற்சாகமாக மீண்டும் பள்ளிக்குச் சென்றனர். பருவமழை நெருங்கி வருவதால், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வுகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
End of Term Holidays Schools Open