காலையிலேயே கதவை தட்டிய அமலாக்கத்துறை - விசிக துணை பொதுச் செயலாளர் வீட்டில் சோதனை.!
enforcement department raide in vck executive adhav arjuna house
விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
இதேபோல், ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. காலையிலேயே அவரது வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா வீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
enforcement department raide in vck executive adhav arjuna house